தஞ்சை மாவட்டத்தில் பலரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். கடந்த 13ஆம் தேதி நாகராஜன், விக்னேஷ், மகேஷ்வரன், கெளதம் ஆகியோர் தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி தலா 40 ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக புகார் அளித்தனர். இதனையடுத்து வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், மோசடியில் ஈடுபட்ட புதுக்கோட்டையை சேர்ந்த முருகானந்தம் என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து முருகானந்தத்தை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.