மதுரை மாவட்டம் பாலரெங்கபுரத்தில் மதுபோதையில் பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டதை கண்டித்த தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர். பெற்றோர் தனக்கு எந்த உதவியும் செய்யவில்லை என கூறி அவர்களிடம் தகராறு செய்த அண்ணன் கருணாமணியை அவரது தம்பி நினைவரசன் தடுத்து அறிவுரை வழங்கி அனுப்பியதாக தெரிகிறது.