மதுரையில் கூலித்தொழிலாளியை குத்தி கொலை செய்த நபரை போலீஸார் கைது செய்தனர். செக்கானூரணி பகுதியில் ஒரே வீட்டில் சுந்தரி மற்றும் சாந்தி ஆகிய இரு சகோதரிகள், அவரவர் கணவருடன் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், சாந்தியின் கணவர் சோனு பிரபாகரன், சுந்தரியுடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறி பிரபு தகராறு செய்துள்ளார். அப்போது, சோனு பிரபாகரன் தான் வைத்திருந்த ஆயுதத்தால் பிரபுவை குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது.