திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். முத்தையம்பட்டியில் வெள்ளைச்சாமி என்பவர், விநாயகா மெடிக்கல்ஸ் என்ற பெயரில் மருத்துவ நிலையம் நடத்தி வந்த நிலையில், மருத்துவர் என்று கூறிக்கொண்டு மக்களுக்கு சிகிச்சை அளித்துள்ளார். 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவர், கடந்த 20 ஆண்டாக மருத்துவம் பார்த்துள்ளார்.