திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு, விரிவான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கடற்கரையில் தடுப்பு வேலிகளும், 65 எல்இடி திரைகளும் அமைக்கப்பட்டுள்ளன. 6000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 855 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதோடு, 3 இடங்களில் 1500 பேருந்துகள் நிறுத்தக்கூடிய வகையில் தற்காலிக பேருந்து நிறுத்துமிடங்கள், 20 இடங்களில் தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 824 கழிப்பறைகள், 25 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 27 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.