கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் தாய்லாந்தில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பிடித்துள்ளார். சந்தப்பேட்டை பகுதியை சேர்ந்த ராணுவ வீரரான வசந்தகுமார் ஐக்கிய உலக விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி கூட்டமைப்பின் சார்பில் தாய்லாந்தில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தார்.