தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பணிக்கு செல்லாமல் மாயமான ராணுவ வீரரை கண்டுபிடித்து தருமாறு அவரது தந்தை புதியம்புத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.புதியம்புத்தூர் மேலமடம் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் அருண்குமார் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.கடந்த ஆண்டு மார்ச் மாதம் விடுமுறைக்கு வந்த அருண்குமார், நவம்பர் மாதம் பணிக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றுள்ளார்.ஆனால் அருண்குமார் பணிக்கு செல்லாத நிலையில், பல்வேறு இடங்களில் அவரது தந்தை விசாரித்து பார்த்ததில், அவர் ஆன்லைன் ரம்மி விளையாடி பல லட்சம் ரூபாயை இழந்ததாகவும், யாருக்கும் தெரியாமல் பூர்விக சொத்தை விற்று விட்டதாகவும் கூறப்படுகிறது.