ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் கோவையில் இன்று முதல் வரும் 16 ம் தேதி வரை நடைபெறுகிறது. 174 ராணுவ வீரர்கள், 50 கிளார்க் பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படுகின்றன. பிஆர்எஸ் வளாகத்தில் துவங்கிய இந்த முகாமில், தமிழகம் மட்டுமின்றி தெலங்கானா, குஜராத், கோவை, புதுச்சேரி, தாதர் மற்றும் நாகர் ஹவேலி, டாமன் டையூ மற்றும் லட்சத்தீவை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர். முதற்கட்டமாக உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டு பின் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். அதன்பின்பு 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை போன்றவை மேற்கொள்ளப்பட்டு பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.