திருவண்ணாமலையில், நில அளவை செய்வதற்கு ஆயுதப்படை காவலரிடம் 7 ஆயிரத்து 500 லஞ்சம் பெற்ற கிராம உதவியாளரும் தனியார் நில அளவையரும் கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். செங்கம் அருகேயுள்ள சே.அகரம் கிராமத்தை சேர்ந்த அஜித், சென்னையில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். அவர், கிராமத்தில் உள்ள தனது இடத்தை அளவீடு செய்ய மனு அளித்த நிலையில், இதற்கு பெரும்பாக்கம் கிராம உதவியாளர் மற்றும் தனியார் நில அளவையர் ஆகியோர் 15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். முதல் தவணையாக Google pay மூலம் 7 ஆயிரத்து 500 ரூபாயை பெற்றுக்கொண்டு மேலும் 3 ஆயிரம் கொடுத்ததால் தான் நிலத்தை அளவீடு செய்யமுடியும் என கூறியதால் அஜித் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.