ஆயுத பூஜை கொண்டாட்டத்தை ஒட்டி பூக்கள், பழங்கள், அவல், பொரி உள்ளிட்ட பூஜை பொருட்கள் வாங்க கூட்டம் அலைமோதியது.தொழில் நிறுவனங்கள் மற்றும் கருவிகளுக்கு ஆயுத பூஜை நடத்துவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஆயுத பூஜை இன்று கொண்டாடப்படுகிறது. பூஜைக்கு தேவையான பொருட்கள் வாங்க பொது மக்கள் ஆர்வம் காட்டினர். வாகனங்களிலும், வீடுகளிலும், அலுவலகங்களிலும், கடைகளிலும், ஆயுத பூஜை விமர்சையாக கொண்டாடப்படுவதால், தேவையான பொருட்களை வாங்கும் விதமாக அனைத்து கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.சென்னை கோயம்பேடு சந்தை, பாரிமுனை பூக்கடை பஜார், மயிலாப்பூர் சன்னதி தெருக்கள், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம் தானா தெரு உள்ளிட்ட முக்கிய கடை வீதிகளில் ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. கோயம்பேடு மார்க்கெட் பகுதி மட்டுமில்லாமல், சாலையோர கடைகளிலும் ஆயுத பூஜை பொருட்களை அதிகாலையிலேயே வங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். சென்னை கோயம்பேட்டை தொடர்ந்து பாரிமுனை பகுதிகளிலும் ஆயுதபூஜை கொண்டாட்ட பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.