திருப்பத்தூரில் தகாத வார்த்தையால் திட்டி மிரட்டியதாக, போக்குவரத்து ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆயுதப்படை காவலர் ஒருவர் போலீசில் புகாரளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வீரப்பன் என்ற அந்த காவலர், திருப்பத்தூர் நகர போலீசில் அளித்துள்ள புகார் மனுவில், விநாயகர் சிலை ஊர்வலம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தன்னை, ஆம்பூர் நகர போக்குவரத்து ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார்.அதை தட்டிக் கேட்டதற்கு, தன் மீது ஸ்பெஷல் ரிப்போர்ட் கொடுத்து விடுவதாக மிரட்டி, தகாத வார்த்தைகளால் திட்டியதாக இன்ஸ்பெக்டர் மீது ஆயுதப்படை காவலர் வீரப்பன் புகார் தெரிவித்துள்ளார்.