தனியார் முதலீட்டில் பூங்கா அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து பாஜக, அதிமுக கவுன்சிலர்கள் கருப்புத்துண்டு அணிந்து நகர்மன்றக் கூட்டத்தில் வாக்குவாதம் செய்தனர். குமரி மாவட்டம் குளச்சல் நகராட்சி கூட்டத்தில் காமராஜர் பேருந்து நிலையம் முன்பு பூங்கா அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து பாஜக கவுன்சிலர் சுரேஷ், தீர்மான நகலை கிழித்து எறிந்ததோடு, தலைவரையும் முற்றுகையிட்டார்.