கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் மாரியம்மன் கோயிலில் வைக்கப்பட்ட பதாகையை அகற்றக்கோரி ஒருதரப்பு சமுதாய மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த கோயிலில் வழிபாடு செய்வது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கோயில் முன்பாக சாதி வேறுபாடின்றி அனைத்து மக்களும் வழிபடலாம் என வைக்கப்பட்ட பதாகையை அகற்ற வேண்டும் எனக் கோரி ஒரு தரப்பு மக்கள் காவல்துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.