திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் ஆட்டோ தொழிற்சங்கத்தை சேர்ந்த நபரை அதிமுக கவுன்சிலர் தள்ளி விட்ட சம்பவம் நடந்தது. எம்ஜிஆர் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சியின் போது மாலை அணிவித்து போட்டோ எடுத்துக் கொள்வதில் அதிமுக கவுன்சிலர் நடராஜன் என்பவருக்கும், ஆட்டோ தொழிற்சங்கத்தை சேர்ந்த காளியப்பன் என்பவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காளியப்பனை, அதிமுக கவுன்சிலர் தள்ளிவிட்டார்.