திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய முக்கனூர் பகுதியில் இரண்டாயிரம் ரூபாய் பணம் கொடுத்தது தொடர்பான தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்டார். கோடீஸ்வரன் என்பவர் சில ஆண்டுக்கு முன் மணிகண்டன் என்பவருக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்தப் பணத்தை வெள்ளிக்கிழமை கோடீஸ்வரனின் பெரியம்மா மகனான கிருபாகரன் என்பவர் மணிகண்டனிடம் திருப்பிக் கேட்ட நிலையில், இருவருக்கு தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதில் கிருபாகரனுக்கு ஆதரவாக வந்த கோடீஸ்வரனை, மணிகண்டன் சரமாரியாக கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக மணிகண்டன் உடன் இருந்த மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.