தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே நெற்கட்டும்செவலில் மாமன்னர் பூலித்தேவனின் 310 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவிக்க அதிக அளவில் நாம் தமிழர் கட்சியினர், போலீசாரின் எதிர்ப்பையும் மீறி பேரிகார்டை விலக்கி விட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது நாம் தமிழர் கட்சியினரை தடுத்து நிறுத்திய போலீசார், அதிக அளவில் கூட்டமாக செல்லக் கூடாது என்று கூறியதால், போலீசாருக்கு நாம் தமிழர் கட்சியினருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.