சென்னையில் டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் பயணி தாக்கியதில் நடத்துநர் கீழே விழுந்து உயிரிழந்தார். பேருந்தில் நடத்துநர் ஜெகன்குமாருக்கும், குடிபோதையிலிருந்த பயணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதாக கூறப்படும் நிலையில், பேருந்திலிருந்து கீழே விழுந்த நடத்துனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.