சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்காக தொடர்ந்து சேவை செய்ய உள்ளதாக பேராயர் ஜேக்கப் லிவிங்ஸ்டன் தெரிவித்துள்ளார். தென்னிந்திய திருச்சபையின் 25 ஆவது மண்டலத்தின் புதிய பேராயராக தேர்வு செய்யப்பட்ட அவர், சேலம் அஸ்தம்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, நிர்வாக ரீதியாக வளர்ந்த சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து சேவை செய்ய உள்ளதாக கூறினார்.