வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே மலைகிராமத்தில் சுமார் 100ஏக்கரில் அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். தொடர் கனமழையால், ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள அரவட்லா ஏரி நிரம்பி வெளியேறும் உபரிநீரால் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாய நிலங்களில் நீர் புகுந்தது. இதனால் அரவட்லா பகுதியில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் முழுவதுமாக நீரில் மூழ்கி அழுகிய நிலையில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.