தனது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவில் திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ”கனிமா” பாடலுக்கு குஷியாக நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.கள்ளக்குறிச்சி - சேலம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் மகளின் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதில் அவரின் முக்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், மேடையில் தனது மகளுடன் இணைந்து அவர் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தார்.