திருவள்ளூர் மாவட்டம் அயனம்பாக்கத்தில் அப்பு பிரியாணி கடை சமையல் கூடத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்ததை தொடர்ந்து, ஆத்திரத்தில் பிரியாணி அண்டாக்களை சாலையின் குறுக்கே போட்டு கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சுகாதாரமின்றி உணவு சமைத்து விநியோகம் செய்ததாக எழுந்த புகாரை அடைத்து சீல் வைக்கப்பட்டது.