ஆசிய கபடி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற காரணமாக இருந்த சென்னை கண்ணகிநகர் வீராங்கனை கார்த்திகாவிற்கு தமிழக கேபிள்டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெறுகிறது. பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோருக்கான கபடி போட்டியில்,இந்திய அணி வெற்றி பெற்று தங்கம் வென்று அசத்தியது. இந்திய அணி வெற்றி பெற கில்லியாக இருந்த கார்த்திகாவிற்கு டி.சி.ஓ.ஏ சார்பில் பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. டி.சி.ஓ.ஏ. தென் சென்னை மாவட்ட தலைவர் பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் கார்த்திகாவை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்ததுடன், டி.சி.ஓ.ஏ.சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தனர்.