தமிழ்நாட்டை சேர்ந்த 84 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலம் 3% இடஒதுக்கீட்டின் கீழ் சர்வதேச, தேசிய அளவிலான போட்டியில் வென்றோருக்கு பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார்