பாகிஸ்தானால் இந்தியா எதிர்கொள்ளும் பிரச்னைகளை எடுத்துரைக்க ரஷ்யா, ஸ்பெயின் நாடுகளுக்கு சொல்லவுள்ளதாக கனிமொழி எம்.பி. கூறினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், உலக நாடுகளுக்கு செல்லும் எம்பிக்கள் குழுவில் தன்னையும் நியமனம் செய்ததற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார்.