கரூரில், 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஓடி ஒளிந்தவர்கள், நானும் ரவுடிதான் என வடிவேல் சொன்னது போல் பேசி வருவதாக தவெக தலைவர் விஜய் பேச்சு குறித்து சபாநாயகர் அப்பாவு விமர்சித்தார். திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் பனை விதைகளை நடவு செய்வது மற்றும் மரம் வளர்ப்பது குறித்த விழிப்பணர்வு நிகழ்ச்சியை அப்பாவு துவக்கி வைத்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து பெருந்தன்மையோடு நடந்து கொண்ட முதலமைச்சரை, சிறுமைபடுத்தி பேசுபவர்கள் சிறுமைபட்டு போவார்கள் என்றும் கூறினார்.விஜய் பலவீனமானவர், ஒரு பிரச்சனை என்றவுடன் அவரும் அவருடன் உள்ளவர்களும் ஓடி ஒளிந்து விட்டார்கள் என்றும், நடிகர்கள் கட்சி ஆரம்பித்து என்ன ஆனார்கள் என்ற வரலாறு உள்ளது. தற்போது, கட்சி ஆரம்பித்த நடிகரும் அந்த வரலாற்றில் இடம் பெறுவார் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இதையும் பாருங்கள் - விஜய் பலவீனமானவர் - அப்பாவு பதிலடி | Appavu Reply To Vijay | Vijay Speech Reaction