திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பருத்திப்பட்டில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் கழிவு நீர் சூழ்ந்து துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று அபாயம் ஏற்படுவதாக கூறி குடியிருப்பு வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து குடியிருப்பு சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, முறையாக பதில் அளிக்காமல் மிரட்டல் தொணியில் பேசுவதாக குற்றம் சாட்டினர்.