சென்னையில் நடைபெற்ற நவராத்திரி நிகழ்ச்சியில், துர்க்கையாகவே மாறி அனுஷா விஸ்வநாதன் நடனமாடியது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. வடபழனி லஸ்யா டான்ஸ் அகாடமி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நவராத்திரி நிகழ்ச்சியில், மரத்தால் வடிவமைக்கப்பட்ட இன்டீரியர் வேலைபாடுகளுடன் கோவிலுக்குள் நுழைந்த உணர்வை தரும் வகையில் அறையை அலங்கரித்து இருந்தனர். முதல் நாள் நிகழ்ச்சியில் துர்கா தேவியின் பெருமைகளை குறிப்பிடும் வகையில் நடனமாடிய நடனக் கலைஞர் அனுஷா, முதலில் சாதாரணமாக தொடங்கி தனு வர்னம், தில்லானாவில் மோகன கல்யாணி என கொஞ்சம் கொஞ்சமாக வேகம் காட்டி, இறுதியில் ஐகிரி நந்தினி பாடலுக்கு துர்கா தேவியாகவே மாறி நடனமாடினார்.