கிருஷ்ணகிரியில் மா விவசாயிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்திய அன்புமணி,பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் தம் மீது முன்வைக்கப்பட்ட 16 குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றார். முன்னதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப தயாராக இருந்ததை அறிந்து கொண்ட பாமக நிர்வாகிகள், அதனை தவிர்ப்பதற்காக அன்புமணி வாகனத்தின் முன்பு பிரச்சார வேனை நிறுத்தி பாட்டை சத்தமாக ஒலிக்க வைத்து சுற்றி நின்று கொண்டனர். அதே போல் கூட்டம் முடிந்து வெளியே வந்த அன்புமணியும், சத்தமாக இருப்பதாக கூறி விட்டு செய்தியாளர்களுக்கு பதிலளிக்காமல் நழுவிச் சென்றார்.