கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் அன்புமணி தரிசனம் செய்தார். அன்புமணி கனக சபையின் மீது ஏறியவுடன் அவரது பாதுகாவலர்களும் சஃபாரியுடன் மேலே ஏறியதால், தடுத்து நிறுத்திய கோவில் பாதுகாவலர்கள் சட்டை பனியனை கழற்றி விட்டபடி மேலே செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர். அதனை பொருட்படுத்தாமல் அன்புமணியின் பாதுகாவலர்கள் மேலே ஏறியதால், லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பொதுமக்கள் கூறிய பிறகு சபாரியையும், பனியனையும் கழற்றி விட்டு மேலே ஏறினார்கள்.