ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சியுடன் ஆண்டிகுளம் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள மக்கள் கருப்பு பேட்ஜ் மற்றும் கொடியினை ஏந்தியபடி ஊர்வலமாக சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, காடையாம்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று எதிர்ப்பினை பதிவு செய்தனர்.