தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, ஊராட்சிக்கு சொந்தமான குப்பை வண்டிகளை சிறைபிடித்து கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வனப்பகுதியை ஒட்டியுள்ள 90 ஏக்கர் பரப்பிலான மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில், 7 ஏக்கர் இடத்தை தேர்வு செய்து அதில் இண்டூர் ஊராட்சிக்கு சொந்தமான குப்பைகளை கொட்டுவதற்கு நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம் அனுமதி வழங்கியது. குப்பைகள் அப்பகுதியில் கொட்டப்பட்டு வந்த நிலையில், எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் குப்பை வாகனங்களை சிறைபிடித்தனர்.