திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 55 ஆயிரத்து 210 ரூபாய் பணம் சிக்கியுள்ளது. சார் பதிவாளராக ப்ரீத்தி என்பவர் பணியாற்றி வரும் நிலையில், அவருடைய தந்தை செய்தியாளர்கள் வீடியோ எடுப்பதை பார்த்து கொலையா பண்ணீட்டாங்க என்று கூறிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.