கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சுமார் 1 மணி நேரமாக சோதனை நடத்தினர். ஏராளமான பொதுமக்கள் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்திருந்த நிலையில், அலுவலகத்தின் வாயிலை மூடிவிட்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர்.