தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர். அதில், கண்காணிப்பு பொறியாளர் கந்தசாமியிடம் இருந்து 40 ஆயிரம் ரூபாயும், 6 உதவி பொறியாளர்கள் மற்றும் 2 ஒப்பந்ததாரர்களிடம் இருந்து 74 ஆயிரத்து 500 ரூபாய் என கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.