சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையின் போது, கணக்கில் வராத இரண்டரை லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மண்டல அலுவலகத்தில் இருந்த 15 அலுவலர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.