சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கணக்கில் வராத ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகனப்பதிவு, ஓட்டுநர் உரிமம் போன்றவற்றிக்கு அதிகளவில் லஞ்சம் வாங்குவதாக எழுந்த புகாரில், மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையிலான போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.அதில் வட்டார போக்குவரத்து அலுவலர் ரகுபதியின் கார் மற்றும் பணியாளர்களின் வாகனங்களில் இருந்த ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.