விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 25 ஆயிரத்து 350 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், திடீர் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், அலுவலக ஊழியர்கள் மற்றும் புரோக்கர்கள் என 25 பேரிடம் விசாரணை நடத்தினர்.