திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 79 ஆயிரத்து 100 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து சார் பதிவாளர் பாலாஜி மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுப்பதற்கு அவர்கள் பரிந்துரை செய்தனர்.