விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 71 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.கடந்த 5 ஆண்டுகளாக போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக வீட்டுமனை பட்டாக்களுக்கு பத்திரப்பதிவு செய்யப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனால் அரகண்டநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் சுமார் 6 மணி நேரமாக சோதனை நடத்திய நிலையில், புரோக்கர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களிடமிருந்து கணக்கில் வராத சுமார் 71 ஆயிரத்து 560 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.