நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவரிடம் இருந்து கணக்கில் வராத 3 லட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பொது நிதியில் பணி ஒதுக்கீடு செய்ய, ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பெறப்பட்ட கமிசன் பணம் என்பது விசாரணையில் தெரியவந்தது.