கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில், விசிக சார்பில் மது மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெற உள்ள இடத்தினை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பார்வையிட்டார். மாநாடு தொடர்பான நடைபெற்று வரும் பணியினை திருமாவளவன் நேரில் சென்று ஆய்வு செய்து அக்கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.