கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேருந்து நிலையத்தில், மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் மது ஒழிப்பு மாநாடு மற்றும் பேரணி நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து மது ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சங்கராபுரம் பேருந்து நிலையம் வரை பேரணி நடைபெற்றது. தொடர்ந்து அங்குள்ள பொது மேடையில், மாநாடு நடைபெற்றது. இதில், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.