ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதியில் அந்தியூர் திமுக எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலத்தின் காரை ஒற்றை காட்டு யானை வழி மறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடமாடும் 15 நியாய விலைக் கடைகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்கு, எம்எல்ஏ சென்று கொண்டிருந்த போது, உணவு தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வந்த ஒற்றை காட்டு யானை வழி மறித்தது. அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலத்தின் காரை வழி மறித்து நின்றது. தொடர்ந்து, எம்எல்ஏவின் காரை துரத்தவும் யானை முற்பட்டுள்ளது. இதனைக் கண்ட அவ்வழியாக வந்த மலைவாழ் மக்கள் சத்தமிட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டி உள்ளனர். இதனை அடுத்து எம்எல்ஏ நிம்மதியாக மலைப் பாதையில் பயணித்தார்.