சட்டமன்ற தேர்தலில் திமுக - தவெக இடையில் தான் போட்டி என்ற விஜயின் கருத்து குறித்த கேள்விக்கு, கூட்டணி எல்லாம் ஜனவரி, பிப்ரவரியில் கூட இறுதி செய்யப்படலாம் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார். கூட்டணி குறித்து பேசுவதில்லை என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும், தலைமை முடிவு செய்வதை ஏற்றுக் கொள்வதாகவும் கூறினார்.