அரியலூரில் நிதி நிறுவன ஊழியர் கொலை வழக்கில் தம்பதியை தொடர்ந்து, அவர்களது உறவினர் ஒருவரையும் போலீஸார் கைது செய்தனர். தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் பிரதிநிதியாக பணிபுரிந்த தஞ்சை கஞ்சனூரை சேர்ந்த சிவாவை கொலை செய்ததாக அரியலூர் கோடாலி கிராமத்தை சேர்ந்த மகேஷ், அவரது மனைவி விமலா ஆகியோரை போலீஸார் கைது செய்த நிலையில், தற்போது மகேஷின் அக்கா மகன் ராஜேஷையும் கைது செய்தனர். இதையும் படியுங்கள் : மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி விழா.. சிறுமிகளின் நடனத்தை கண்டு ரசித்த பக்தர்கள்