காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளை சத்திரம் அருகே முன்னால் சென்ற லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் பெண் ஒருவர் தூக்கி வீசப்பட்டு உடல் நசுங்கி உயிரிழந்தார்.ஸ்ரீ பெரும்புதூருக்கு விவசாய வேலைக்காக சென்ற பொன்னி அம்மன் பட்டறை பகுதியை சேர்ந்த 5 பெண்கள், பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற ஒரு லாரியை மடக்கி லிப்ட் கேட்டு அதில் பயணித்தாக கூறப்படுகிறது.பிள்ளை சத்திரம் பகுதியில் சென்ற லாரி முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் வேகமாக மோதியது.இதில் சாந்தி என்பவர் தூக்கி வீசப்பட்டு, சக்கரம் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். லாரி ஓட்டுநர் உள்ளிட்ட மற்ற 4 பேரும் காயமடைந்தனர்.