திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே முன்னால் சென்ற கார் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்ட கண்டெய்னர் லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானது. ஆம்புரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி பச்சகுப்பம் என்ற பகுதியில் முன்னால் சென்ற கார் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக வந்த மற்றொரு லாரி கண்டெய்னர் லாரி மீது மோதியதில் இரண்டு லாரிகளும் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர்களான செல்வம், மற்றும் பிரசாந்த் ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பினர். இந்நிலையில், விபத்துக்குள்ளான லாரிகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அகற்றாததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.