சுப்பிரமணியபுரம் திரைப்படத்தைப் போல மதுரையில் அடுத்து ஒரு படம் எடுக்கப்போவதாக, இயக்குநரும் நடிகருமான சசிகுமார் தெரிவித்தார். மதுரை உத்தங்குடியில் நடைபெற்ற தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் பேசிய அவர், குத்துனது நண்பனா இருந்தா செத்தாக் கூட சொல்ல கூடாது என்கிற சினிமா டயலாக்கை பேசி, நட்பை விட்டு விடாதீர்கள் என்று அட்வைஸ் செய்தார்.