திருச்சி மணப்பாறை அருகே பன்னாங்கொம்பில் உள்ள அம்மன் கோயிலில் திருவிழா நடத்துவதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கோயிலை பூட்டிவிட்டு சாவியை அதிகாரிகள் எடுத்து சென்றனர். மாரியம்மன், பகவதி அம்மன் கோவிலில் இருதரப்பினர் இடையேயான பிரச்சனையில் பல ஆண்டுகளாக திருவிழா நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், புத்தாநத்தம் காவல் துறையினர் திருவிழா நடத்த அனுமதி வழங்கியதால் ஒருதரப்பினர் திருவிழா நடத்த ஏற்பாடுகளை செய்தனர். அதன்படி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியபோது மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை.