கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று, பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்காக அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார். சேலத்தில், தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய பாமக தலைவர் அன்புமணி கூறியதாவது:பாமக தொண்டர்கள் எதிர்பார்க்கும் கூட்டணி விரைவில் அறிவிக்கப்படும். அடுத்த 4 மாதங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். அடுத்தது நம் ஆட்சி தான். நாம் அனைவரும் ஒன்றாக செயல்பட்டு நல்லது செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அனைத்து சமுதாயமும் எந்த நிலையில் இருக்கிறார்கள் என தெரிந்துகொள்ள தான் இந்த கணக்கெடுப்பு. இது சாதி பிரச்சனை அல்ல, சமூக பிரச்சனை. இவ்வாறு அன்புமணி கூறினார். இதையும் கேளுங்கள்: பாமக தலைவர் அன்புமணி பேச்சு | PMK Anbumani Speech | Urimai Meetpu Payanam | PMK